மனித நேயத்துக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டான முஸ்லிம் பெண் ஐபிஎஸ் அதிகாரி!

ஜூலை 06, 2018 867

புதுடெல்லி (06 ஜூலை 2018): மனித நேயத்திற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாக விளங்கியுள்ளார் டெல்லி பெண் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்லம் கான்.

காஷ்மீரை சேர்ந்த ஏழை ட்ரக் டிரைவரான சர்தார்மான் சிங் தனது மருமகள் திருமணத்திற்காக ரூ 80000 சேர்த்து வைத்திருந்தார். அந்த தொகையுடன் தனது தாய் மற்றும் குடும்பத்தினரை காண டெல்லியிலிருந்து ட்ரக்கில் சென்று கொண்டிருந்தபோது வழியில் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடித்ததோடு, சர்தார்மன் சிங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதனால் நிலைகுலைந்து போனது சர்தார்மான் சிங்கின் குடும்பம். இதனை அறிந்த டெல்லி ஐபிஎஸ் அதிகாரியான அஸ்லம் கான், சர்தார்மான் சிங்கின் குடும்பத்திற்கு தான் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் பாதி தொகையை சர்தார்மான் குடும்பத்திற்கு வழங்கியும் வருகிறார்.

இந்நிலையில் அஸ்லம் கான் குறித்து பெருமிதத்தோடு பேசும் சர்தார்மான் சிங்கின் மகள் பல்ஜீத் கவுர், எதிர் காலத்தில் அஸ்லம் கான் போன்று ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நானும் வருவேன் என்று கூறினார்.

சர்தார்மான் சிங்கிறகு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...