ஜாகிர் நாயக் குறித்து மலேசிய அரசு விளக்கம்!

ஜூலை 06, 2018 856

கோலாலம்பூர் (06 ஜூலை 2018): இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்பும் திட்டம் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாகக் கூறி இந்திய அரசு அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அவரது தொண்டு நிறுவனமும் முடக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கும் ஜாகிர் நாயக் இந்தியாவில் நியாயமான முறையிலும் நேர்மையான முறையிலும் தன் மீது விசாரணை நடத்தப் படும் என்றால் இந்தியா வருவேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்..

இதற்கிடையே மலேசியாவில் தற்போது பதவி ஏற்றிருக்கும் மஹாதிர் முஹம்மது தலைமையிலான புதிய அரசு ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. அவர் மலேசிய குடியுரிமை பெற்றுள்ள நிலையில் அவர் மலேசியாவிலேயே தங்குவார் என்றும். அவரால் அரசுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...