அண்ணா என்னை விட்டுடுங்க - பெண் கெஞ்சியும் கேட்காத மூன்று கொடூரர்கள்!

ஜூலை 07, 2018 1272

உன்னாவோ (06 ஜூலை 2018): இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்தது முதல் வன்முறைகளும் பாலியல் கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உன்னாவோ பகுதியில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை காட்டுக்குள் கடத்திச் சென்று கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளது. அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். அதில், "அண்ணா என்னை விட்டுடுங்க ப்ளீஸ்" என்று அந்தப் பெண் கெஞ்சியும் கேட்காமல் மூன்று கொடூரர்களும் கொடூரமாக வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராகுல் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரலில் 16 வயது சிறுமியை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வன்புணர்வு செய்ததும், இதுகுறித்து கேட்க சென்ற சிறுமியின் தந்தை மர்மமான முறையில் மரணம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...