அலீமுத்தீன் கொலையாளிகளுக்கு மத்திய அமைச்சர் மாளிகையில் வரவேற்பு!

ஜூலை 07, 2018 556

புதுடெல்லி (07 ஜூலை 2018): ஜார்கண்டில் கொல்லப் பட்ட அப்பாவி அலீமுத்தீன் கொலை வழக்கின் குற்றவாளிகள் 8 பேருக்கு மத்திய அமைச்சர் அவரது மாளிகையில் வரவேற்பு அளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வருடம் மாடுகளை ஏற்றிச் சென்றதாக குற்றஞ்சாட்டி அலீமுத்தீன் என்ற அப்பாவி நடுரோட்டில் பசு பயங்கரவாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

ஆனால் அவர்களில் 8 பேர் கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். இது அலீமுத்தீன் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜயந்த் சின்ஹாவுடன் அந்த எட்டு பேரும் கைகோர்த்தபடி அமைச்சரின் மாளிகையில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்ததாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

ஜாமீனில் வெளியாகியுள்ள குற்றவாளிகளுடன் மத்திய அமைச்சர் கைகோர்த்தபடி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...