முத்தலாக் தடை சட்டம் கோரிய மனுதாரர் சாய்ரா பானு பாஜகவில் இணைந்தார்!

July 07, 2018

புதுடெல்லி (07 ஜூலை 2018): முத்தலாக் தடை சட்டம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்த சாய்ரா பானு பாஜகவில் இணைந்துள்ளார்.

உத்தரகாண்டை சேர்ந்த சாய்ரா பானு(40) அவரது கணவரல் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப் பட்டார். இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் வேண்டி மனு அளித்தார். நாடாளு மன்றத்திலும் முத்தலாக் தடை சட்ட மசோதா கொண்டு வரப் பட்டது எனினும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் இதுவரை அது அமுல் படுத்தப் படவில்லை.

இந்நிலையில் சாய்ரா பானு உத்தரகாண்ட் பாஜக தலைவர் அஜய் பட்டை சந்தித்து பாஜகவில் இணைவதை உறுதி செய்தார். அபோது அவரது தந்தை இக்பாலும் உடன் இருந்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஜய் பட், சாய்ரா பானுவின் வருகை பாஜகவுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!