ஏழு மாதங்களாக சீரழிக்கப் பட்ட 9 ஆம் வகுப்பு சிறுமி - பள்ளி ஆசிரியர்கள் கைது!

ஜூலை 07, 2018 596

பாட்னா (07 ஜூலை 2018): பீகாரில் 9 ஆம் வகுப்பு பயிலும் ஏழுமாதங்களாக சிறுமியை சீரழித்த பள்ளி தாளாளர், ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம், ஏக்மா என்ற பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். அவர் அருகே உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், குற்ற சம்பவம் ஒன்றில் சிக்கிய அவரின் தந்தைக்கு சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தனியாக வசித்து வந்த அந்த சிறுமியை சக மாணவர்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களும், பள்ளியின் தாளாளரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வாறு கடந்த 7 மாதமாக அந்த மாணவியை ஆசிரியர்கள் சீரழித்துள்ளனர். அச்சம் காரணமாக இந்த விவகாரம் குறித்து யாரிடமும் கூறாமல் தவித்து வந்த அச்சிறுமி, தனது தந்தை சிறையிலிருந்து விடுதலையானவடன் அவரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...