அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுப் படுகொலை!

July 08, 2018

ஐதராபாத் (08 ஜூலை 2018): அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலை.யில் கம்ப்யூட்டர் மென்பொருள் என்ஜினியரிங் படித்து வரும் சரத் கபூர் (26) என்ற மாணவர் ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதில் சரத்கபூர் குண்டுகாயங்களுடன் இறந்த கிடந்தது தெரியவந்துள்ளது. சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

பலியான மாணவர் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது உடலை இந்தியா கொண்டு வர தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!