மண மேடையில் அதிர்ச்சி - யாருக்கும் நடக்கக் கூடாத சோகம்!

ஜூலை 08, 2018 759

மெஹபூப் நகர் (08 ஜூலை 2018): மண மேடையில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணமகள் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகர் அருகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் இருக்கிறது மெகபூப் நகர் மாவட்டம். அங்கு அச்சம் பேட்டையில் வெங்கடேஷ், லட்சுமி ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கில் அனைவரும் திளைத்திருந்தனர். திருமணம் முடிந்ததும் கணவன் வெங்கடேஷ் மற்றும் மனைவி லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் நிகழ்வில் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேசன் மீது சரிந்தார். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு லட்சுமியை அழைத்துச் செல்கையில் அவர் ஏற்கெனவே இறந்தது போன செய்தி தெரியவந்தது.

இதுகுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...