ராமன் கூட வன்புணர்வை தடுக்க முடியாது- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து!

ஜூலை 08, 2018 1080

பல்லியா (08 ஜூலை 2018): ராமன் உலகில் இருந்தால் கூட வன்புணர்வை தடுத்து நிறுத்த முடியாது என்று உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ சுரேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் வன்புணர்வு குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து எம்.எல்.ஏ சுரேந்திரா சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்," வன்புணர்வு சம்பவங்கள் சந்தர்ப்ப சூழலை பொறுத்தது. இது இயற்கையானது. எல்லோருக்கும் உணர்வுகள் உள்ளன. கடவுள் ராமர் உலகில் வந்தால் கூட வன்புணர்வை தடுக்க முடியாது. அனைத்து பெண்களையும் சகோதரிகளாக, தாயாக நாம் நினைக்கும் வரை அதனை தடுத்து நிறுத்த முடியாது. நம் மனக்கட்டுப் பாட்டில் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்." என்றார்.

ஏற்கனவே அரசு ஊழியர்களை விட விபச்சாரம் செய்பவர்கள் சிறந்தவர்கள் என்ற சர்ச்சை கருத்தை இவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...