9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு!

ஜூலை 08, 2018 658

போபால் (08 ஜூலை 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பாகீரத் பாட்டீல் (40) என்பவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் 3 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுதன்சூ சாக்சேனா குற்றவாளி பாட்டீலுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

வன்புணர்வு குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் சட்டதிருத்த மசோதா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...