வாட்ஸ் அப்பில் போலி தகவல்களை கண்டறியும் புதிய வசதி!

ஜூலை 09, 2018 654

புதுடெல்லி (09 ஜூலை 2018): வாட்ஸ் அப்பில் போலி தகவல்களை கண்டறியும் வசதியை ஏற்படுத்தும் புதிய அம்சம் சோதனை செய்யப் பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்த அம்சம் சோதனை செய்யப் பட்டு வருகிறது. இதன் மூலம்
வாட்ஸ் அப்பில் வரும் போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.

மேலும் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் வலைத்தள முகவரி கொண்டு வலைத்தளம் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...