நிர்பயா வழக்கில் குற்றவளிகள் தூக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது!

ஜூலை 09, 2018 611

புதுடெல்லி (09 ஜூலை 2018): நிர்பயா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் உட்பட 3 பேரின் மேல்முறையீட்டு வழக்கில் அவர்களது தூக்குத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி டெல்லியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் சாலையில் தூக்கியெறியப்பட்டநிலையில் மீட்கப்பட்ட நிர்பயாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 29-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற மறுஆய்வு செய்யக்கோரி வினய் சர்மா, முகேஷ், பவன், ஆகிய 3 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை.

இதற்கான விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...