மனைவி தயாரித்த ரொட்டி கரிந்ததால் முத்தலாக் சொன்ன கணவன்!

ஜூலை 09, 2018 641

மஹோபா (09 ஜூலை 2018): உத்திர பிரதேசத்தில் மனைவி தயார் செய்த ரொட்டி கரிந்து போனதாக் கணவன் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டம் பஹ்ரிதா கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் போலீசில் அளித்துள்ள புகாரில், " எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு நான் தயர் செய்த ரொட்டி கரிந்து போனது. இதனால் ஆத்திரம் அடைந்த என் கணவர் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறினார். மேலும் என் உடலில் சிகெரட்டால் பல இடங்களில் சுட்டு சித்ரவதை செய்தார்." என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஒரே நேரத்தில் அளிக்கும் முத்தலாக் எந்த விதத்திலும் செல்லுபடியாகாது என்று மிகத் தெளிவாக உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...