இந்தியா முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஷரீஅத் நீதிமன்றங்கள் நிறுவ முடிவு!

ஜூலை 10, 2018 677

புதுடெல்லி (10 ஜூலை 2018): இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஷரீயத் நீதிமன்றங்களை அமைக்க அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பலரும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளை தங்கள் பகுதியிலுள்ள மசூதிகளின் ஜமாத்துகளில் புகார் அளித்து தீர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களின் ஷரீயத் சட்டத்தின் கீழ் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டியது அந்த ஜமாத்துக்களின் கடமையாக உள்ளது. ஆனால், சில ஜமாத்துக்கள், கிராமப்புறப் பஞ்சாயத்துக்களை போல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாகப் புகார் உள்ளது. இதனால், ஜமாத்துக்களில் முடியாத பிரச்சினைகள் காவல்நிலையங்களில் புகாராகவும் நீதிமன்றங்களில் வழக்காகவும் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றில் பல புகார்கள் சமீப காலமாக சர்ச்சைக்குள்ளாகி தங்கள் மதம் விவாதத்திற்கு உள்ளாவதாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களின் மாவட்டங்கள்தோறும் ஒரு ஷரீயத் நீதிமன்றம் அமைக்க முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

‘தாரூல் கஜா’ எனப்படும் ஷரீயத் நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ள நிலையில் இதன் மீது ஜூலை 15-ல் நடைபெறவிருக்கும் அதன் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...