புது மணப் பெண்ணின் ஆபாச படத்தால் தடை பட்ட திருமணம்!

ஜூலை 10, 2018 836

கிழக்கு கோதாவரி( 10 ஜூலை 2018); மண மேடையில் புது மாப்பிள்ளைக்கு வந்த மணப் பெண்ணின் ஆபாச புகைப் படத்தால் திருமணம் தடை பட்டது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அபலாபுரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்ட தயாராக இருந்த நிலையில் ஒரு கவர் ஒன்றை மணமகன் கையில் அங்கு யாரோ வந்து கொடுத்துள்ளனர். கவரை திறந்து பார்த்த மணமகன் அதிர்ச்சி அடைந்தார். அதில் மணமக ஆபாசமாக இருந்த புகைப்படம் இருந்தது. இதனால் மணமேடையை விட்டு எழுந்த மணமகன் அந்த பெண்ணை மணமுடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப் பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த புகைப்படம் மார்ஃபிங் செய்யப் பட்டது என்று தெரிய வந்தது. மேலும் புகைப்படத்தில் வேறொரு பெண்ணின் தலையை மட்டும் வெட்டிவிட்டு மணப் பெண்ணின் முகத்தை மார்ஃபிங் மூலம் மாற்றி அமைத்து யாரோ மணமகனுக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...