தாஜ்மஹாலை பராமரிக்காதது ஏன்? - மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்!

ஜூலை 11, 2018 666

புதுடெல்லி (11 ஜூலை 2018): தாஜ்மஹாலை முறையாக பராமரிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தாஜ்மஹாலை முறையாக பராமரிக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம், தாஜ்மஹாலை பாதுகாத்து முறையாக பராமரிக்க தவறி விட்டதாக கூறியுள்ளது. மேலும் ஈஃபில் கோபுரத்தை ‘டி.வி டவர்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “அந்த டவரை 8 மில்லியன் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர். தாஜ்மஹால் அதைவிட மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் அதை நல்ல முறையில் பராமரித்து இருந்தால், இந்தியாவின் அந்நிய செலாவணி பிரச்சனை தீர்ந்திருக்கும். உங்கள் அக்கறையின்மையால் தேசத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு உங்களுக்கு புரிகிறதா” என்று கடுமையாக சாடியது.

தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில், அமைந்துள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏன் பின்பற்றவில்லை என்று, தாஜ்மஹால் மண்டலத்தின் தலைவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...