சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது குற்றப் பத்திரிகை தாக்கல்!

ஜூலை 11, 2018 984

லக்னோ (11 ஜூலை 2018): உன்னாவோ சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

உத்திர பிரதேசம் உன்னாவோ பகுதி 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்தவரான உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கர் மீது குற்றம் சாட்டப் பட்டது., மேலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, அந்தச் சிறுமி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, குற்றம் சாட்டிய பெண்ணின் வீட்டுக்குச் சென்ற எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பெண்ணின் தந்தையைத் தாக்கினர். மேலும் ஆயுத வழக்கில் பெண்ணின் தந்தை பப்புசிங், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் திடீரென உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ செங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் செங்கரை சி.பி.ஐ கைது செய்தது. ஏற்கனவே, சிறுமியின் தந்தை உயிரிழந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ-வின் சகோதரர் கைது செய்யப் பட்டார்.

இந்நிலையில் சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல். குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...