மத்திய அரசின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - ஹமீது அன்சாரி!

ஜூலை 12, 2018 677

புதுடெல்லி (12 ஜூலை 2018): ஒரே தேசம் ஒரே தேர்தல் திட்டம் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்காக ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்கான முயற்சியில் இந்திய தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. இதுபோன்ற ஒரு பெரிய நாட்டிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது பயன் தராத யோசனை. சட்டப்பேரவை தேர்தலின்போது கூட பல கட்டங்களில் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், நாடு முழுவதும் பாதுகாப்பு வழங்குவது எப்படி சாத்தியமாகும்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் பெரும்பான்மையான தொகுதிகளில் 50 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத போதிலும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் முழு தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்படி? என ஹமீது ஹன்சாரி வியப்பு தெரிவித்தார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...