பெண்ணிடம் முத்தம் கேட்ட போலீஸ் - பெண் பகீர் புகார்!

ஜூலை 13, 2018 676

காஜியாபாத் (13 ஜூலை 2018): உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலீஸ் முத்தம் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்தார். அவர் வீட்டுக்கு விசாரணைக்காக வந்த போலீஸ் அதிகாரி அந்தப் பெண்ணிடம் முத்தம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து எதுவும் சொல்லாமல், அமைதியாக இருந்துவிட்டார். பின்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து பதிவிட்ட அந்த பெண் அதனை ஒன்றிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் காஜியாபாத் உயர் போலீஸ் அதிகாரி ஆகியோருக்கும் அந்த பதிவை டேக் செய்துள்ளார். இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...