திருடிய நகையை மன்னிப்புக் கடிதத்துடன் திருடனே திருப்பி கொடுத்த ருசிகர சம்பவம்!

July 13, 2018

ஆலப்புழா (13 ஜூலை 2018); கேரளா மாநிலம் ஆலப்புழாவில் திருடிய நகைகளை திருடன் மன்னிப்புக் கடிதத்துடன் உரியவரிடம் திருப்பி கொடுத்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுகுமார் என்பவர் தன் குடும்பத்தாருடன் செவ்வாய்கிழமையன்று மாலை கருவாட்டா பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிய குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்த குமார், பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். வீட்டில் நகைகள் திருடி போயிருந்ததால் மறுநாள் காலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால் வீட்டில் அடுத்அ நாள் காலை மதுகுமாருக்கு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டின் முன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சுற்றி ஒரு தாளும் இருந்துள்ளது. அக்கடிதத்தில், “தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பணம் தேவைப்பட்டதனாலேயே உங்கள் நகைகளை திருடினேன். இனி இது போல் தவறு செய்ய மாட்டேன். எனக்கு எதிராக போலீசாரிடம் புகார் அளிக்காதீர்கள்” என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக வழக்கை வாபஸ் பெற்றார் மதுக்குமார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!