நீங்கள் இஸ்லாத்தை விரும்புகிறீர்களா? பிரபல நடிகையின் பொளேர் பதில்!

ஜூலை 13, 2018 846

மும்பை (13 ஜூலை 2018): பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் “Ask Me A Question” என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவுக்கு பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் குறிப்பாக, "நீங்கள் இஸ்லாத்தை விரும்புகிறீர்களா? " என்ற கேள்விக்கு, "நான் எல்லா மதத்தையும் விரும்புகிறேன். யாரெல்லாம் பக்தியுடன் நேர்மையுடன் உள்ளனரோ அவர்கள் மீது அன்பு காட்டும்படி என் இந்து மதமும் எனக்கு படிப்பித்துள்ளது." என்று பதிலளித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு நான் பாகிஸ்தானையும் விரும்புகிறேன். ஒருவேளை அங்கே செல்ல நேர்ந்தால் அங்கேயே மரணிக்கவும் நான் விரும்புகிறேன்." என்று பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீர் சிறுமி வன்புணர்வு படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த பிரபலங்களில் சோனம் கபூரும் குறிப்பிடத்தக்கவர். இதற்காக இந்துத்வாவின் மிரட்டலுக்கு உள்ளாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...