நான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை: ஜாகிர் நாயக்!

ஜூலை 13, 2018 682

கோலாலம்பூர் (13 ஜூலை 2018): நான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்ததோ அல்லது அதுகுறித்து பேசியதோ இல்லை. என்று இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

இஸ்லாமிய மதத்தின் பெயரால் நான் வன்முறையை தூண்டிவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக புனையப்பட்டவை. மனிதாபிமானம் அற்றவையாகும். நல்ல மனிதராக இல்லாத ஒருவர் நல்ல முஸ்லிமாக இருக்கவே முடியாது என நான் எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

வன்முறைக்கு தூண்டியதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குவதுதான் எனது நோக்கமாக இருந்துள்ளது.

நான் செய்துவந்த ஆயிரக்கணக்கான பிரசார கூட்டங்களில் எனது பேச்சுக்கு எதிராக இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களிடமிருந்து எந்த கண்டனமும் வந்ததில்லை.

ஆனால், என்னை குறிவைத்து தாக்குதல் தொடங்கிய பின்னர், நான் பேசிய வீடியோ பதிவுகளை முறைகேடாக திருத்தி வெளியிட்டு நான் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. நான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை . நான் பின்பற்றும் மதமும் அதனை கற்பிக்க வில்லை.

இவ்வாறு அறிக்கையில் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய குடியுரிமை பெற்றுள்ள ஜாகிர் நாயக், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரணை நடத்தப் படும் வரை இந்தியா வரப்போவதில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...