நஜீமை கண்டுபிடித்து தருவதில் சிபிஐ முனைப்பு காட்டவில்லை - தாய் நபீஸ் பாத்திமா!

ஜூலை 14, 2018 602

புதுடெல்லி (14 ஜூலை 2018): காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீபை கண்டுபிடிப்பதில் சிபிஐ முனைப்பு காட்ட வில்லை என்று அவரது தாய் நஃபீஸ் பாத்திமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் அளித்துள்ள் மனுவில் இதனை அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை மாணவரான நஜீப் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் நஜீப் அஹமதுவை அவர் காணாமல் போவதற்கு முன்பு தாக்கியதாக கூறப் படுகிறது. இந்நிலையில அவர் காணாமல் போனார்.

ஆனால் இதுவரை அவர் என்ன ஆனார் என்பது குறித்து தகவல் இல்லை . இந்நிலையில் அவரது தாயார் நஃபீஸ் பாத்திமா தொடர்ந்து இவ்விவகாரத்தில் போராடி வருகிறார். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சிக்கித் தவிக்கிறது.

இந்நிலையில் வியாழன் அன்று நஜீமின் தாயார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மகன் காணாமல் போன வழக்கை சரிவர கையாளவில்லை என்று சிபிஐ மீது புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...