வாட்ஸ் அப் வதந்தியால் மேலும் ஒரு படுகொலை!

ஜூலை 15, 2018 663

பெங்களூரு (15 ஜூலை 2018): கர்நாடகாவில் வாட்ஸ் அப்பிப் பரவிய குழந்தை கடத்தல் வதந்தியால் 32 வயது கம்ப்யூட்டர் பொறியாளர் முஹம்மது அசாம் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த கணிணி பொரியாளர்கள் முஹம்மது அசாம் மற்றும் அவரது கத்தார் நண்பர் முஹம்மது சலாம் பஷீர், சல்மான், அக்ரம் உள்ளிட்ட சிலர் கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் காரை நிறுத்தி அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் விநியோகித்துள்ளனர். இதனை பார்த்த ஒருவர் வாட்ஸ் அப்பில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றித் திரிவதாக வதந்தி பரப்பினார். உடன் அப்பகுதிக்கு வந்த கும்பல் அவர்களை சூழ்ந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டது. அவர்களின் வாகனமும் சேதப்படுத்தப் பட்டது

இதில் 32 வயது கம்ப்யூட்டர் பொறியாளர் முஹம்மது அசாம் படுகொலை செய்யப் பட்டார். மேலும் அவரது கத்தார் நண்பர் பஷீர், சல்மான், அக்ரம் உடபட நான்கு பேர் படு காயம் அடைந்துள்ளனர். சுமார் 100 க்கும் அதிகமானோர் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது. இதுவரை 32 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப் வத்ந்திக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வதந்தியால் ஏற்படும் படுகொலைகள் தொடரும் அபாயம் நிலவுகிறது. இதுவரை 20 க்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் வதந்தியால் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...