பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கோவிலில் வைத்து எரித்துக் கொலை

ஜூலை 16, 2018 802

உன்னாவ் (16 ஜூலை 2018): உத்திர பிரதேசம் உன்னாவ் உன்னாவ் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த பெண்ணை இழுத்து சென்று 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாபால் மாவட்டம் குன்னார் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண் அவரது வீட்டில் அவரது இரண்டு குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டு இருந்தார். இவரது கணவர் காசியாபாத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் 13 ஆம் தேதி வீடில் தனியாக இருந்த அந்த பெண்ணை, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து உள்ளது. பின்னர் அவர் பலமுறை கெஞ்சி மன்றாடியும் அவரை விடாமல் அந்த கும்பல் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளது அந்த கும்பல்

பின்னர் அந்த பெண்ணை அருகில் இருந்த கோவிலுக்கு இழுத்துச்சென்ற அந்த கும்பல் அவரை உயிருடன் எரித்துள்ளது. இதில் அந்த பெண் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ண உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...