ரெயிலில் பிறந்த இரட்டைக் குழந்தை!

July 16, 2018

மும்பை (16 ஜூலை 2018): மும்பைக்கு அருகே 30 வயது சல்மா தப்ஸம் என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

மும்பை எல்டிடி - விசாகபட்டிணம் எக்ஸ்பிரஸ் ரயில், கல்யாண் ரயில் நிலையத்துக்கு வந்தவுடன், சல்மா தப்ஸம் அதில் ஏறியுள்ளார். ரயிலுக்குள் வந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே ரெயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீஸ், ரயில்வே துறை மருத்துவக் குழு மற்றும் கல்யாண் ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் தப்ஸம் இருக்கும் ரயில் பெட்டிக்கு விரைந்தனர். மருத்துவக் குழு, தப்ஸமுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து தப்ஸமுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண் குழந்தையாகும். குழந்தைகள் பிறந்ததையடுத்து, ரயிலிலிருந்து சக பயணிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர். பிரசவம் முடிந்த பிறகு தாயும் இரு குழந்தைகளும் அருகிலிருந்த மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!