போலீசுடன் மனைவி உல்லாசம் - வீடியோவை வெளியிட்ட கணவன்!

ஜூலை 16, 2018 2236

பெங்களூரு (16 ஜுலை 2018): பெங்களூரில் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த எஸ்.பி மீது கணவர் ஒரு குழப்பமான புகார் அளித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் சுரேஷ், இவரது மனைவி ரூபா போட்டோ ஸ்டோடியோ நடத்தி வந்தார். ரூபாவுக்கும் தாவணகெரே எஸ்பியாக பீமாசங்கர் பதவி வகித்தபோது அவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. ஆனால் , ரூபாவையும் என்கவுண்டர் செய்துவிடுவதாக மிரட்டிய பீமாசங்கர் ரூபாவுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் அதற்கான ஆதாரகளாக வீடியோவும் போலீசில் அளித்துள்ளார். மேலும் அதை பலாத்கார வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுரேஷின் மனைவி ரூபாவே, இந்த புகாரை மறுத்துள்ளார். பீமாசங்கர் தன்னை மிரட்டவில்லை என்று கூறியுள்ள அவர், சுரேஷ்தான் தன்னை வீட்டில் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், எனவே, தனது கணவரை விட்டு கடந்த சில மாதங்களாக, பிரிந்துதான் வாழ்ந்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த வழக்கை எவ்வாறு கையாள்வது என்று போலீசார் குழம்பி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...