நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்!

ஜூலை 16, 2018 1139

ஐதராபாத் (16 ஜுலை 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிசிசிஐ அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் போட்டியிடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அசாருதீன். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றபின் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கடந்த 2009–ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானின் டோங்–சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...