தந்தையை முறையாக கவனிக்காவிட்டால் மகனுக்கு சொத்து கிடையாது!

ஜூலை 16, 2018 655

மும்பை (16 ஜூலை 2018): தந்தையை மகன் முறையாக கவனிக்கவில்லை என்றால் மகனுக்கு சொத்துரிமை பறிக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு முதியவரின் மனைவி கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய விரும்பியதாகவும் அப்போது மகன் மற்றும் மறுமகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் தனது குடியிருப்பில் 50 சதவீதத்தை சொந்த மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது மகன் அவரையும் அவரது இரண்டாவது மனைவியையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் முதியவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி மகன் முறையாகக் கவனிக்கத் தவறினால் கொடுத்த சொத்தை திரும்பப்பெற உரிமையுண்டு என தீர்ப்பளித்தார். மேலும் மகனுக்கு முதியவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...