நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் வன்புணர்வு!

ஜூலை 16, 2018 681

புதுடெல்லி (16 ஜூலை 2018): டெல்லியில் நீதிமன்ற ஓய்வு அறையில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இளம் பெண் வழக்கறிஞரை வன்புணர்வு செய்ததாக பாதிக்கப் பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெறும் பெண் ஒருவர் போலீசில் அளித்துள்ள புகாரில், சாகேத் நீதிமன்றத்தில் மூத்த வக்கீலாக தொழில் செய்யும் 50 வயதுடைய ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஓய்வு அறையில், மதுபோதையில் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மூத்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

தொடர்ந்து வழக்கறிஞரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த வழக்கறிஞர்கள் ஓய்வு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அறையை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இச்சம்பத்தால், நீதிமன்றத்தில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...