விமான பணிப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்!

ஜூலை 17, 2018 621

புதுடெல்லி (17 ஜூலை 2018): டெல்லியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விமானப் பணிப்பெண், தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றும் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பஞ்சீல் பார்க் என்ற இடத்தில் வசித்தவர், அனிசியா பத்ரா. இவர், மயங்க் சிங்வி என்பவரைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திவந்துள்ளார். மயங்க், குடிபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வீட்டின் மொட்டைமாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் அனிசியா பத்ரா.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `அனிசியாவை அவரது கணவர் துன்புறுத்திவருவதாக, அப்பெண்ணின் தந்தை இரண்டு நாள்களுக்கு முன்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவர், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டால் அதற்கு, மயங்க் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான், அனிசியா தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக மயங்க் தெரிவித்துள்ளார். அவர் சென்று தடுப்பதற்குள் அனிசியா மாடியிலிருந்து குதித்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், இது தற்கொலை இல்லை, மயங்க் குடும்பத்தினர்தான் தன் மகளைக் கொலைசெய்துவிட்டனர் என்று அனிசாவின் தந்தை தெரிவிக்கின்றார். அனிசாவின் உடல், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயங்க் குடும்பத்தினார் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...