நண்பனின் தாயை ஆபாச படம் எடுத்தவன் குத்திக் கொலை!

ஜூலை 17, 2018 922

ஐதராபாத் (17 ஜூலை 2018): நண்பனின் தாய்குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்ததை அடுத்து மகன் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

ஐதராபாத் சந்தாநகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (21), மற்றும் அதே பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (23) என்பவரும் சிறு வயது முதல் நண்பர்கள். இதனால் சம்பத் குமார் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவது வழக்கம்

இந்நிலையில் அஜய் குமார் ஒருநாள் வீட்டுக்கு சம்பத் குமார் வீட்டுக்கு வந்தபோது, பாத்ரூமில் சம்பத் குமார் தாய் குளித்துக்கொண்டிருந்தார். இதை கதவு வழியாக எட்டிப் பார்த்த அஜய் குமார், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த சம்பத் குமார் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று, ஒரு பாரில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சம்பத் தனது ஸ்கூட்டரில் அஜயை ஏற்றிக்கொண்டு சந்தாநகர் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கே வைத்து, தனது தாய் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் குறித்து அஜயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சம்பத், தனது நண்பன் அஜய் கழுத்தை அறுத்துள்ளார். இதை அப்பகுதியினர் பார்த்து ஓடி வந்தனர். அதற்குள் சம்பத் குமார் தப்பியோடிவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஜய்குமார் இறந்துவிட்டார். அஜய் குமார் தந்தை டேனியல் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பத் குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...