BREAKING NEWS: நொய்டாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் விபத்து!

July 18, 2018

புதுடெல்லி (18 ஜூலை 2018): உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

செவ்வாயன்று இரவு நடந்த இந்த விபத்தில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

விபத்து நடந்து நெடு நேரமாகியும் மீட்புக் குழு எதுவும் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல மணி நேரங்கள் தாமதமாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்டிட விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த கவுதம் புத் மாவட்ட நீதிபதி மற்றும் உ.பி. அம்மாநில உயர் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!