சுவாமி அக்னிவேஷ் மீது இந்துத்வாவினர் கொலை வெறி தாக்குதல்!

ஜூலை 18, 2018 566

ராஞ்சி (18 ஜூலை 2018): சமூக ஆர்வலரும் நல்லிணக்கவாதியுமான சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக இளைஞர் அமைப்பினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் சென்று இருந்தார். நேற்று காலை தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அவர் வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த, பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை தாக்கினர்

சுவாமி அக்னிவேஷுக்கு அருகில் இருந்த பழங்குடியினர் அவரைப் பாதுகாக்க முற்பட்டனர். அவர்களுக்கும் அடி விழுந்தது.பின்னர் அவர்கள் சுவாமி அக்னி வேஷை சுற்றி நின்றபடி ஓட்டலுக் குள் அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்ததும் பாஜக இளைஞர் அணியினர் தப்பியோடிவிட்டனர்.

இதனிடையே சுவாமி அக்னிவேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியதாக 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சுவாமி அக்னிவேஷ் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடினார். இதற்காக அவர் பலமுறை கைதானார். இதன்மூலம் சமூகப் போராளி என்ற அந்தஸ்தைப் பெற்றார். புரி ஜெகன்னாதர் கோயிலில் வழிபட இந்துக்கள் அல்லாதோருக்கும் அனுமதி தரவேண்டும் என்ற கோஷத்தை சுவாமி அக்னிவேஷ் எழுப்பியதால் இந்துக்களின் விரோதி என்று விமர்சனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...