பண மதிப்பிழப்பிற்குப் பிறகு இந்தியாவில் வெளியிடப் பட்ட 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சவூதியில் தடை விதிக்கப் பட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாகம், அந்நிய நாட்டு பண மேலாண்மை சட்டம் 2015 ன்படி ஹஜ் யாத்ரீகர்கள் இந்தியாவில் வெளியிடப் பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்வதில் தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.