விஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுக்கு தடை!

ஜூலை 18, 2018 639

கவுஹாத்தி (18 ஜூலை 2018): விஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கவுஹாத்தியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரவீண் தொகாடியா திட்டமிட்டிருந்தார் இதற்காக வி.ஹெச்.பி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கவுஹாத்தி நகர காவல்துறை ஆணையர் ஹிரண் சந்திரா நாத், பொதுமக்கள் மத்தியில் வெறுப்பூட்டும் வகையில் பேசுவதாக கூறி, குவஹாட்டி நகருக்கு பிரவீண் தொகாடியா வர தடை விதித்துள்ளார்.

பிரவீண் தொகாடியா சிறுபான்மையினர் மனது புண்படும்படி பேசுவதால் அவருக்கு இரண்டு மாதம் கவுஹாத்தியில் நுழைய தடை விதித்துள்ளதாக காவல்துறை ஆணையர் ஹிரண் சந்திரா நாத், தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கவும் அவருக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...