பாஜக வின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகல்!

ஜூலை 18, 2018 678

கொல்கத்தா (18 ஜூலை 2018): பாஜகவின் முக்கிய பிரமுகரும் The Pioneer பத்திரிகையின் ஆசிரியருமான சந்திரன் மித்ரா பாஜக-வில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக-வின் சார்பில் இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவருமான சந்திரன் மித்ரா பாஜக-வில் இருந்து விலகி திரினாமுல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூலை 21-ஆம் நாள் மேற்குவங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் சார்பில் ஹாயித் திவாஸ் நிகழ்ச்சி ஒருங்கினைக்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மமதா பேனர்ஜி தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு தன்னை கட்சியில் சந்திரன் மித்ரா இணைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்வானி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் இவர் பாஜகவில் அத்வானி அவமதிக்கப் படுவது பிடிக்காமலும், அமித்ஷாவின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துள்ளதாலும் சந்திரன் மித்ரா பாஜகவிலிருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...