சபரிமலையில் பெண்களுக்கு மீண்டும் அனுமதி இல்லை!

July 19, 2018

சபரிமலை (19 ஜூலை 2018): சபரிமலையில் பெண்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வழிபட செல்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை என்ற நடைமுறையை தேவசம் கடைபிடித்து வருகிறது. இது இன்று, நேற்று அல்ல, பல காலங்களாக தொடர்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மட்டுமில்லை, சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உட்பட பல வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற பரப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பலநாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்களைப் போல் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும், சபரிமலையில் பெண்களை வழிபட மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது தனிமனிதனின் உரிமை மீறும் செயல் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தன

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!