வாட்ஸ் அப் ஃபார்வேர்ட் மெசேஜ் காரங்களுக்கு பெரிய ஆப்பு!

ஜூலை 20, 2018 655

புதுடெல்லி (20 ஜூலை 2018): வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்புபவர்களை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் புதிய அப்டேட் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் கடத்தல் கும்பல், பசு கடத்தல் கும்பல் என பரவும் வதந்திகள் மூலம் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இது போன்ற செய்திகள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு இரு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகையால் வாட்ஸ் ஆப் நிறுவனம் எடுத்த நடவடிக்கையின் படி, இன்றிலிருந்து குறிப்பிட்ட மொபைல் நம்பரிலிருந்து ஒரு மெசேஜை 5 முறை மட்டுமே ஃபார்வார்ட் செய்ய முடியும். 5-வது முறைக்கு மேல் அந்தக் குறிப்பிட்ட மெசேஜை ஃபார்வெர்ட் செய்ய இயலாது. இது வாட்ஸ் ஆப் உபோயகப்படுத்தும் எல்லோருக்கும் பொருந்தும்.

மற்றபடி குறிப்பிட்ட மெசேஜின் எழுத்துகளை காப்பி செய்து அதை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். மேலும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தரவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்புவதும் சுலபம்.

இந்நிலையில், மக்களும் அரசாங்கமும் மனது வைத்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் வதந்திகளையும், போலி செய்திகள் பரவுவதையும் தடுக்க முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...