பழைய சோறு போட்டவரை குத்திக் கொலை செய்த பிச்சைக் காரர்!

ஜூலை 21, 2018 540

மும்பை (21 ஜூலை 2018): மும்பை அருகே நாய்க்கு நல்ல உணவு கொடுத்துவிட்டு தனக்கு பழைய சோறு போட்டவரை பிச்சைக் காரர் ஒருவர் குத்திக் கொலை செய்துள்ளார்.

மராட்டிய மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் சார்யு பிரசாத்(வயது52). புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டுக்கு தினசரி அந்த பகுதியை சேர்ந்த தன்குமார்(35) என்ற பிச்சைக்காரர் சாப்பாடு கேட்டு வருவதும், சார்யு பிரசாத் அவருக்கு பழைய சோறு போடுவதும் வழக்கம். அதேநேரம் தெருநாய்களுக்கு சார்யு பிரசாத் சப்பாத்தி போட்டு வந்தார்.

சார்யு பிரசாத் வீட்டுக்கு நேற்று முன்தினம் பிச்சைக்காரர் தன்குமார் சென்றபோது வழக்கம்போல வீட்டில் இருந்த பழைய உணவை அவருக்கு கொடுத்துவிட்டு, தெருநாய்களுக்கு சப்பாத்தி போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரர் தன்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் சார்யு பிரசாத்தை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...