ராகுலின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு!

ஜூலை 21, 2018 602

புதுடெல்லி (21 ஜூலை 2018): ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான ரகசியங்கள் காக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேசியதை கவனித்ததாக குறிப்பிட்டுள்ளது. போர் விமானங்கள் தொடர்பான விவரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே ரகசியம் காக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ரகசிய உடன்படிக்கையும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் தம்மிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பேசியதற்கு பதிலளித்த பிரான்ஸ் அரசின் வெளியுறவு அமைச்சகம், ராகுல் காந்தியின் பேச்சு இருநாடுகளின் ரகசிய உடன்படிக்கையை மீறி விட்டதாக கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது என்பதால், விமானங்களின் விலை, செயல்பாடு உள்ளிட்ட முழு விவரங்களையும் வெளியிட இயலாது என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசின் விளக்கம் குறித்து பதிலளித்துள்ள ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், ரஃபேல் ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் அதிபர் தன்னிடம் கூறியதையே தாம் தெரிவித்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...