மனைவியை கைவிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து!

ஜூலை 21, 2018 778

புதுடெல்லி (21 ஜூலை 2018): மனைவியை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாஸ் போர்ர்டுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சக உத்தரவின்படி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் (என்ஆர்ஐ) இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தங்களது திருமணத்தை 7 நாட்களுக்குள் பதிவு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும் மனைவிகளை கைவிட்டு தலைமறைவாகிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குறித்த விவரங்களும் சேகரிக் கப்பட்டு வருகின்றன. அதன்படி, 70 வெளிநாட்டு வாழ் இந்தியர் கள், இவ்வாறு மனைவியை கைவிட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 8 பேரின் பாஸ்போர்ட்கள் முதல்கட்ட மாக ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...