காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை!

ஜூலை 21, 2018 556

ஜம்மு (21 ஜூலை 2018): காஷ்மீரின் குல்காம் கிராமத்தில் உமர் பாரூக் என்ற 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

குக்லாம் கிராமத்தில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில், கை வெட்டப்பட்டு, பாதி உடல் எரிந்த நிலையில் இருந்த சிறுவனின் சடலத்தை காவல் துறையினர் கண்டெடுத்தனர். இந்த செய்தியை அறிந்த ஊர் மக்கள், சிறுவனுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவனின் கொலை குறித்து விசாரணை நடத்துமாறு காவல் துறையினரை ஊர் மக்கள் வற்புறுத்தினர். இதுவரை குற்றவாளிகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போராட்டத்தின்போது கான்ஸ்டபிள் மீதும் தக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஷப்கத் ஹூசேயின், ஊர் மக்களிடம் இருந்து கான்ஸ்டபிளை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.

கிராமத்தில் வன்முறைகள் ஏற்படாமல் இருக்க, வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் குப்வார நகரம் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மொபைல் இணையத்தள சேவையும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...