ராகுல் காந்தி குறித்து பிரியா வாரியார் என்ன சொல்லியுல்லார் தெரியுமா?

ஜூலை 21, 2018 538

புதுடெல்லி (21 ஜூலை 2018): கண்ணடிப்பதில் பிரியா வாரியாருக்குப் பிறகு ராகுல் காந்தி உலக அளவில் ட்ரெண் ஆகியுள்ளார்.

நடிகை பிரியா வாரியர் தனது ஒற்றைக் கண் அசைவில் ஒரே நாளில் புகழ் பெற்று சமூக வலைதளங்களில் முதலிடத்தை பிடித்தார். அதேபோல் மக்களவையில் கண்ணடித்த ராகுல் காந்தியும் ஒரே நாளில் உலக அளவில் சமூக வளைத்தளங்களில் முதலிடத்தை பெற்றார்.

ஒரு அடார் லவ் படத்தில் புருவத்தை உயர்த்தி கண்ணடித்து பலரையும் கவர்ந்த பிரியா வாரியர் ஒரே நாளில் பெரும் புகழ் பெற்று சமூக வலைதளங்களில் முதலிடத்தை பெற்றார். அதேபோல் நேற்று மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிதழுவி வந்து அமர்ந்தார். அதன்பின் ராகுல் காந்தி தமது அருகிலிருந்த ஒரு எம்.பி.யிடம் பேசியபடி கண்ணடித்து புன்னகைத்தார்.

இந்த இரண்டு கண்ணசைவுகளையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ மீம்கள் உலவி வருகின்றன. அதனை பார்த்த நடிகை பிரியா வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தாம் கல்லூரி முடிந்து வந்ததும் ராகுல் கண்ணடித்த நிகழ்வை தொலைக்காட்சியில் கண்டதாகவும், அவரை கண் அடிப்போர் சங்கத்திற்கு வரவேற்பதாகவும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...