அன்பும் அமைதியும்தான் சிறந்த தேசத்தை கட்டமைக்க முடியும்: ராகுல் காந்தி!

July 21, 2018

புதுடெல்லி (21 ஜூலை 2018): அன்பும் அமைதியும்தான் சிறந்த தேசத்தை கட்டமைக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் பற்றி ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். "ஒரு சிலருக்கு இருக்கும் வெறுப்பு, பயம், கோபம் ஆகியவற்றை பிரதமர் மோடி பயன்படுத்திக்கொண்டு, அவருக்கான கனவு சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைக்கிறார். நாங்கள் இந்தியர்களின் இதயத்தில் இருக்கும் அன்பும்,அமைதியும் தான் சிறந்த தேசத்தை கட்டமைக்க உதவும் என்பதை நிரூபிக்க போகிறோம்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சும் அதன் பின்னர் அவர் பிரதமர் மோடியை கட்டியணைத்ததும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The point of yesterday’s debate in Parliament..

PM uses Hate, Fear and Anger in the hearts of some of our people to build his narrative.

We are going to prove that Love and Compassion in the hearts of all Indians, is the only way to build a nation.

— Rahul Gandhi (@RahulGandhi) July 21, 2018

Search!