என் மகன் கொலைக்கு நீதி வேண்டும் - கொலையான அக்பர்கான் தந்தை கதறல்!

ஜூலை 21, 2018 813

ஆழ்வார் (21 ஜூலை 2018): மாடு கொண்டு சென்றதாக பசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட அக்பர்கானின் தந்தை, தன் மகன் படுகொலைக்கு நீதி வேண்டும் என கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே அக்பர்கான் என்ற 28 வயது முஸ்லிம் மற்றும் அவரது நண்பர் நேற்று இரவு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். இவர்களை பசு பயங்கரவாதிகள், சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர். அப்போது ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். இதில் அக்பர்கான் வன்முறைக் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை அந்த கும்பல் சரமாரியாக அடித்ததில் அவர் மயங்கி விழுந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அக்பர்கான் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் கொலையாளிகள் கைது செய்யப் பட்டு கடும் தண்டனை வழங்கப் பட வேண்டும் என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த படுகொலைக்கு ராஜஸ்தான் முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று உள்துறை அமைச்சர் ஜி.சி.கதாரியா தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப் படுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பசு பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்த நிலையில் இந்த படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...