சானிட்டரி நாப்கின் மீதான ஜி.எஸ்.டி. ரத்து!

ஜூலை 22, 2018 520

புதுடெல்லி (22 ஜூலை 2018): சானிட்டரி நாப்கின் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. பிற பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% என ரகம் மற்றும் சேவை வாரியாக வரிகள் விதிக்கப்பட்டன. இதில், சானிடரி நாப்கின்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டது.

இதற்கு மகளிரிடையே எதிர்ப்பு எழுந்தது. பெண்களின் அத்தியாவசியப் பொருளான சானிடரி நாப்கின்களுக்கு இவ்வளவு அதிகமாக வரி விதிப்பதா? என்று மகளிர் சங்கங்கள் குரல் எழுப்பின. குவாலியரை சேர்ந்த மாணவிகள் சிலர் சானிடரி நாப்கின்கள் மீதான வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு நாப்கினிலேயே செய்தி அனுப்பினர்.

இந்நிலையில், சனிக்கிழமை கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிடரி நாப்கின்கள் மீதான வரியை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சானிடரி நாப்கின்களின் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...