மோடியின் மிருகத் தனமான புதிய இந்தியா - ராகுல் தாக்கு!

ஜூலை 23, 2018 596

புதுடெல்லி (23 ஜூலை 2018): மாட்டுக்காக முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படுவதுதான் புதிய இந்தியா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் கடந்த 20 ஆம் தேதி இரவு அந்த பகுதியில் இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர், அதைப்பார்த்த பொதுமக்கள் திருட வந்ததாக நினைத்தது அவர்களை தாக்கி உள்ளனர். அதில் அக்பர் கான் என்பவர் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார்.

மாட்டுக்காக படுகொலை செய்யப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாக சாட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை எச்சரித்தும் இவ்விவகாரம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,"ஆல்வார் நகரில் சந்தேக தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன்? அவர்கள் ஒரு தேநீர் இடைவெளியை எடுத்துள்ளனர்.

இதுதான் மோடியின் மிருகத்தனமான "புதிய இந்தியா". இங்கு மனித நேயம் அகன்று வெறுப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டு இறக்கிறார்கள் என ஆவேசமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...