பிஹரில் அதிர்ச்சி - 20 க்கும் மேற்பட்ட ஏழை சிறுமிகள் வன்புணர்வு!

ஜூலை 23, 2018 484

பாட்னா (23 ஜூலை 2018): பிஹாரில் காப்பகத்தில் வசிக்கும் 20 க்கும் மேற்பட்ட சிறுமிகள் வன்புணர்வு செய்யப் பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பீஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக்கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிறுமியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

இந்தக் காப்பகத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...