வன்புணர்வுக்கு தூக்குத் தண்டனை - மசோதா நிறைவேற்றம்!

ஜூலை 24, 2018 563

புதுடெல்லி (24 ஜூலை 2018): 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கும் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் இன்றைய கூட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குபவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த இரு சம்பவங்களும் நாட்டையும், மக்களின் மனசாட்சியையும் பெரிதும் பாதித்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...